Friday 28 January 2011

நான் படித்தவை...

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் தேசத் தந்தை காந்தியின் கொலை முயற்சியை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது. தேசப்பிரிவினையிலிருந்து துவங்கி இறுதியாக மகாத்மா கொலை, அதைத் தொடர்ந்து விசாரனை, தூக்கு என்று அனைத்தையும் ஆராய்ந்திருக்கும் இந்நூல் கோட்ஸேவை மட்டுமே பிரதானப்படுத்தி சாவர்க்கரின் முழு சதியையும் மறைக்க முயற்சித்தது போல் அமைந்திருக்கிறது. இறுதியில் சதிகளை தேதிவாரியாக பிற்சேர்கையில் அமைத்தது அருமை. இந்நூலைப் பயன்படுத்தி என்.சொக்கன் ஃபாஸிச பரிவாரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம்.

1 comment:

Anonymous said...

என் புத்தகம் பற்றிய உங்கள் விமர்சனத்துக்கு நன்றி நண்பரே!

இதில் எதையும் மறைக்கவேண்டும் என்று வலிய முயற்சி செய்யவில்லை. இந்தக் கொலை முயற்சியில் சாவர்க்கரின் பங்கு (அல்லது பங்கு இன்மை) பற்றி விரிவாக எழுதியுள்ளேன். கோர்ட் சொன்ன தீர்ப்பின் அடிப்படையில்தான் ஒரு வரலாற்றுப் பதிவு இருக்கமுடியும். அந்த அளவில் அவருக்கு இடம் அளித்துள்ளேன். மீதமுள்ள ஊகங்களையும் குறிப்பிட்டுள்ளேன். இது போதுமானது என நம்புகிறேன்.

- என். சொக்கன்,
பெங்களூரு.