தொடர்ந்து பதினேழு மணி நேரம் தூங்காமல் இருப்பவனின் செயல்பாடுகள் இரண்டு கப் ஒயின் குடித்தவனின் செயல்பாடுகளுக்கு இணையாக இருக்கும் என்பது ஐரோப்பிய பழமொழி. ஆனால் இவ்வாக்கை பொய்யாக்கி வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து சாதனை படைத்தவன் நெப்போலியன். அம்மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விறுவிறுப்பாக "போர்க்களப்புயல் மாவீரன் நெப்போலியன்" என்ற தலைப்பில் குறிஞ்சி பதிப்பகம் வெளியீட்டில் குன்றில்குமார் எடுத்தெழுதியிருக்கும் விதம் அவருக்கு பாராட்டை பெற்றுக்கொடுக்கிறது. பிறப்பு, வளர்ப்பு, இளமை, கல்வி, போர், பொறுப்பு, காதல் என்று ஒவ்வொரு பக்கமும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. நெப்போலியனின் சுவாரசியங்கள் என்ற தலைப்பு பயன் தரும் பக்கங்கள். நெப்போலியனின் யுத்த தந்திரங்களை விவரிக்கும் நடை, அவனின் தோல்விகளை எடுத்துரைக்கும் பாங்கு, மிக எளிமையான வார்த்தைகள் எழுத்தாளரின் படைப்புக்கு வழுசேர்க்கிறது.
Showing posts with label நான். Show all posts
Showing posts with label நான். Show all posts
Friday, 28 January 2011
நான் படித்தவை...
மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் தேசத் தந்தை காந்தியின் கொலை முயற்சியை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது. தேசப்பிரிவினையிலிருந்து துவங்கி இறுதியாக மகாத்மா கொலை, அதைத் தொடர்ந்து விசாரனை, தூக்கு என்று அனைத்தையும் ஆராய்ந்திருக்கும் இந்நூல் கோட்ஸேவை மட்டுமே பிரதானப்படுத்தி சாவர்க்கரின் முழு சதியையும் மறைக்க முயற்சித்தது போல் அமைந்திருக்கிறது. இறுதியில் சதிகளை தேதிவாரியாக பிற்சேர்கையில் அமைத்தது அருமை. இந்நூலைப் பயன்படுத்தி என்.சொக்கன் ஃபாஸிச பரிவாரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம்.
Subscribe to:
Posts (Atom)