M.S. அப்துல்ஹமீது அவர்கள் வேலை பளுவுக்கும் இடையில் எழுதிய "இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம் " என்ற புத்தகத்திலிருந்து!
(மொத்த பக்கங்கள் 144, விலை ரூபாய் 50,
இலக்கியச் சோலைச்பதிப்பகம்)
(மொத்த பக்கங்கள் 144, விலை ரூபாய் 50,
இலக்கியச் சோலைச்பதிப்பகம்)
1. அதிக பட்சம் 2-1/2 இல் இருந்து 3 மணி நேரம் போதும் இப்புத்தகத்தை படித்து முடிப்பதற்கு அந்த அளவு விருவிருப்பாக இருந்தது படிப்பதற்கு. படித்த அனைத்தையும் நம் வாழ்வில் உபயோகப்படிதினால் இன்ஷாஅல்லாஹ் நாம் மேல் நிலைக்கு உயர வாய்ப்பு இருக்கின்றது.
2. நடைமுறை மிகவும் அழகாக இருக்கின்றது.
3. நேர நிர்வாகம் மட்டும் அல்ல இந்த புத்தகம். ஒரு முஸ்லிமின் பண்புகளின் நிர்வாகம் என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவு ஒரு முஸ்லிமின் பண்புகளை சரி செய்யக்கூடிய புத்தகமாக இருக்கின்றது.
4. காதர் கதையைவிட சிறுவன் ஆற்றில் மாணிக்கத்தை எறிந்த கதை நெஞ்சில் இறங்கியது.
5.வருடம், மாதம், வாரம், மணித்தியாலம், நிமிடம், வினாடி...பற்றி மிக அருமையாக் எழுதியிருந்தீர்கள்
6. ஒரு நிமிடத்தில் என்ன செய்யலாம் என்று படிக்கும் பொழுதே ஹதீதுகளையும் திக்ருகளையும் ஓதவைத்து விட்டார் ஆசிரியர். அருமையான முயற்சி.
7. ஒரு நிமிடத்தில் 'ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டியவைப் பற்றி அறிந்துகொண்டேன்'.
8. இஸ்லாத்தின் பாதையில் யார் நஷ்டவளி என்பது உணர்ந்தேன்.
9. நமக்கென்று ஒரு பை - புத்தகங்கள் படிக்க நேரமே இல்லை என்பதற்கும் கிடைக்கிற நேரங்களிலெல்லாம் புத்தகங்கள் படிக்கிறேன் என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பார்த்தீர்களா? (மிகவும் முக்கியமான விசயம்)
1 comment:
ஸாதிக் மீரான், தம்மாம்:
“இதுவரை நேர நிர்வாகம் குறித்து நான் வாசித்த நூல்களில் அதுநாள் வரை கேட்டே இராத புதிய ஆங்கில வார்த்தைகள், ஒன்றிற்குப் பத்து தடவை படித்தாலும் மனதில் நிற்காத சுலோகன்கள், எளிதில் விளங்குவது போன்று தோன்றும், ஆனால் மனதில் நிற்காத உதாரணங்கள் என்பவைகளைத்தான் அதிகம் கண்டிருக்கிறேன்.
ஆனால் இந்த நூல் வாசிக்க வாசிக்க சலிப்பில்லா நடை, பாமரனும் விளங்கிக் கொள்ளும் உதாரணங்கள், அவ்வப்போது நம் காதுகளில் விழும் குர்ஆன் வசனங்கள் & ஹதீஸ்கள் சொல்ல வரும் விஷயத்தை எளிதில் மனதில் பதிய வைப்பவை. நேர நிர்வாகத்தை மேலைநாட்டு மினுமினுப்பில் ஒப்பீடு செய்பவர்களுக்கு இந்த நூலில் புதுமை ஒன்றும் இல்லாமல் தோன்றலாம். ஆனால் மரணத்தை நோக்கிய பயணத்தில், மனிதன் தன் இறைவனை நெருங்குவதற்குத் தடையாக இருக்கும் நேரத்தை எங்ஙனம் நிர்வகிக்க முடியும் என்பதற்கான பல நூறு வழிகள் நூல் முழுக்க விண்மீன்களாய் விரவிக் கிடக்கின்றன.
வர்ணங்கள் பல தீட்டி விளம்பரம் செய்து மக்களின் பணத்தை சட்டைப்பைகளில் திணித்துக் கொள்ள நவீன சிந்தனைவாதிகள் நடத்தும் நேர மேலாண்மை குறித்த வகுப்புகளுக்கு சாவு மணி அடிக்கும் நூல் இது என்றால் அது மிகையல்ல.
இவ்வளவு எளிதாக நிர்வாகவியல் குறித்த நூல் எழுத முடியுமா எனும் ஆச்சரியமான கேள்வியை இஸ்லாமிய எழுத்தாளர்களிடையே, சிந்தனைவாதிகளிடையே இந்நூல் எழுப்பப் போவது உண்மை. அந்த வகையில் இந்த நூல் ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.
வாசிப்பினூடே மனதில் பதிந்த சில சிறப்பம்சங்கள்:
“நேரம் என்ற மாணிக்கக் கல்லை வெறும் கல் என்று எண்ணிக் கொண்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி என்ன செய்வது என்று தெரியாமல் நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.” (பக்கம் : 22)
ஒரு நிமிடத்தில் என்னென்ன செய்யலாம் எனும் 21 குறிப்புகள். (பக்கம் : 28-31)
ஒரு ஆசிரியரின் குடுவை நிரப்பும் கதை. (பக்கம் : 56)
“மனதைக் கட்டுப்படுத்தி ஷைத்தானை ஆள்பவர்கள்தான், நேரத்தை ஆக்கப்பூர்வமாக ஆளும் சாதனையாளர்களாக இம்மையிலும், மறுமையிலும்...” (பக்கம் : 91)
“வாழ்க்கை என்பது சாவை நோக்கிய ஒரு பயணம். நாமெல்லாம் மரணத்தின் வாயிலில் கைதி போல் வரிசையாக நின்று கொண்டிருக்கின்றோம். நமக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் நெருங்க நெருங்க ஒன்றும் செய்ய இயலாமல் விழித்துக் கொண்டிருக்கின்றோம்.” (பக்கம் : 112)
“மனிதர்கள் நேரத்தைக் கொல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நேரமோ ஆரவாரமின்றி அமைதியாக மனிதனைக் கொன்று கொண்டிருக்கிறது.” (பக்கம் : 115)
“நாம் எப்போதும் ‘பிஸியாக’ - பரபரப்பாக இருக்கின்றோம். ஆனால் நாளின் இறுதியில் இஸ்லாத்திற்காக என்ன செய்து கிழித்தோம்?” (பக்கம் : 130)
“ஆம்! மரணம் அனேக தர்க்கங்களுக்கு அணை போடுகின்றது. முடிவு கட்டுகின்றது.” (பக்கம் : 135)
Post a Comment