Friday, 28 January 2011

நான் படித்தவை.....

தொடர்ந்து பதினேழு மணி நேரம் தூங்காமல் இருப்பவனின் செயல்பாடுகள் இரண்டு கப் ஒயின் குடித்தவனின் செயல்பாடுகளுக்கு இணையாக இருக்கும் என்பது ஐரோப்பிய பழமொழி. ஆனால் இவ்வாக்கை பொய்யாக்கி வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து சாதனை படைத்தவன் நெப்போலியன். அம்மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை மிகவும் விறுவிறுப்பாக "போர்க்களப்புயல் மாவீரன் நெப்போலியன்" என்ற தலைப்பில் குறிஞ்சி பதிப்பகம் வெளியீட்டில் குன்றில்குமார் எடுத்தெழுதியிருக்கும் விதம் அவருக்கு பாராட்டை பெற்றுக்கொடுக்கிறது. பிறப்பு, வளர்ப்பு, இளமை, கல்வி, போர், பொறுப்பு, காதல் என்று ஒவ்வொரு பக்கமும் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. நெப்போலியனின் சுவாரசியங்கள் என்ற தலைப்பு பயன் தரும் பக்கங்கள். நெப்போலியனின் யுத்த தந்திரங்களை விவரிக்கும் நடை, அவனின் தோல்விகளை எடுத்துரைக்கும் பாங்கு, மிக எளிமையான வார்த்தைகள் எழுத்தாளரின் படைப்புக்கு வழுசேர்க்கிறது.

நான் படித்தவை...

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என்.சொக்கன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியாகியிருக்கும் இப்புத்தகம் தேசத் தந்தை காந்தியின் கொலை முயற்சியை விறுவிறுப்பாக எடுத்துரைக்கிறது. தேசப்பிரிவினையிலிருந்து துவங்கி இறுதியாக மகாத்மா கொலை, அதைத் தொடர்ந்து விசாரனை, தூக்கு என்று அனைத்தையும் ஆராய்ந்திருக்கும் இந்நூல் கோட்ஸேவை மட்டுமே பிரதானப்படுத்தி சாவர்க்கரின் முழு சதியையும் மறைக்க முயற்சித்தது போல் அமைந்திருக்கிறது. இறுதியில் சதிகளை தேதிவாரியாக பிற்சேர்கையில் அமைத்தது அருமை. இந்நூலைப் பயன்படுத்தி என்.சொக்கன் ஃபாஸிச பரிவாரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம்.

Monday, 24 January 2011

At the age of 94 Historian Eric Hobsbawm's new book 'How to change the world: Marx and Marxism'

The publication of How To Change the World may help to set the record straight and not before time: it is his 16th book and appears, impressively, in his 94th year. Although the book is largely made up of previously published material, much of it has never appeared in English and some of it has been revised and updated. The "tales" of the subtitle may be a nervous publisher's attempt to make the contents sound more beguiling to readers who might be thought to be deterred by "essays" or "studies", but fortunately the term does not in this case signal colourful biographical chat or off-beat narratives. The essays are analytical and synoptic and none the worse for that their sheer intellectual quality makes them more compelling than any sexed-up "tales" could be. 

Tuesday, 18 January 2011

Latest Book I Read



பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்ஃபான் ஹபீப் எழுதிய 16 பக்கம் கொண்ட சிறிய புத்தகம் இந்து, முஸ்லிம்கள்
ஒற்றுமையோடு ஏற்படுத்திய சுதந்திர எழுச்சியையும், ஒற்றுமையோடு
ஆங்கிலேயரை எதிர்த்து களமாடியதை ஞாபகமூட்டுகிறது.

எழுத்தாளர் :  இர்ஃபான் ஹபீப்
மொழிப்பெயர்ப்பாளர் : A.குமரேசன்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
விலை: 5/-

Sunday, 16 January 2011

Latest Book I Read

விகடன் பதிப்பகம்
ரூபாய்  : 130

எங்கே போகிறோம் நாம்? தமிழறிவி மணியன் எழுதி விகடன் பதிப்பகம் வெளியிட்ட புத்தகம்.அரசியல் தகவல் களஞ்சியம் என்று கூறும் அளவிற்கு அருமையான புத்தகம்.அரசியல் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.நடுநிலையோடு தற்கால அரசியலை விமர்சித்திருக்கும் விதம் அருமை.மக்களை சிந்திக்க தூண்டும் விதத்தில் சிறந்த கருத்துக்கள்.இந்திய ஜனநாயகத்தை சீர்திருத்த நினைக்கும் மணியனின் கருத்துக்கள் ஆழமாக ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டுகிறது. ?: தமிழறிவி மணியன்
எங்கே போகிறோம் நாம்
எழுத்தாளர்

Tuesday, 11 January 2011

What motivates a young person to become a journalist?

What motivates a young person to become a journalist?

The Mind of a Journalist by Jim Willis

Journalism does not rate that high in popularity among the general public, and many parents worry that their children will not be able to make much of a living if they become journalists. Additionally, ....The profession is now more competitive than ever. So we return to the Question: What motivates a young person to become a journalist?


The Love of Reading and Writing
An Intense Curiosity
A Desire to Contribute
The Independence Factor
Being on the Inside
The Challenges of Going Deeper

All these above points have been discussed in detail, Really very interesting.

The Mind of a Journalist by Jim Willis
SAGE Publications
ISBN 978-1-4129-5457-0

Monday, 10 January 2011

Latest book i read

Read the book 'Badr Porin Arasiyal(பத்ருப் போரின் அரசியல்)
Publication: Illakiyacholai
Language: Tamil
A nice book which gives a different approach on the first great battle of Islam.
(Language bit difficult in some places)